”கசப்பான வார்த்தைகள் உள்ள பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை” - லவ் டுடே இயக்குநர்
பிரபலங்களை விமர்சித்ததாக சமூகவலைதளங்களில் பரவும் சர்ச்சைக்குரிய ஸ்கிரின்சாட்டுகள், பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை என லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விளக்கமளித்துள்ளார்.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், அவரது முகநூல் பக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பதிவிட்டதாக சில ஸ்க்ரீன்ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால் முகநூல் பக்கத்தை De activate செய்துள்ள பிரதீப் ரங்கநாதன், அதில் சில பதிவுகள் உண்மையானவை என்றாலும், கசப்பான வார்த்தைகள் உள்ள பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Comments