கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி முதலமைச்சர் ஆறுதல்

0 3792

சென்னையில் கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அரசு சார்பிலான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் வீட்டிற்கு சென்று இருந்த முதலமைச்சர், பிரியாவின் மூத்த சகோதர் பிரேம்குமாருக்கு சுகாதாரத்துறையில் தேசிய நலவாழ்வு பிரிவில் உதவியாளராக பணி நியமன ஆணை மற்றும் அந்த குடும்பத்திற்கான வீட்டுக்கான உத்தரவு ஆகியவற்றையும் அளித்தார்.

பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் அங்கிருந்த பிரியாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தங்களிடம் உறுதியளித்தாக பிரியாவின் சகோதரர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments