வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை மையம்

0 4461

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சியின் காரணமாக வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால் நவம்பர் 20, 21ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும்.

அப்போது  45 முதல் 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதும் வானிலை மையத்தின் தகவலாகும். இதையடுத்து தமிழக அரசு மறு உத்தரவு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளது.

கடலில் நெடுந்தொலைவு சென்று உள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments