கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் - அமைச்சர் சேகர்பாபு

0 3330

கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு தேவையான  உதவிகளை தமிழக அரசு செய்து தரும் என்று  இந்து சமய  அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில், பெரம்பூரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், கட்டணமில்லா சிறப்பு மருத்துவமுகாமை அமைச்சர் சேகர் பாபு மற்றும்  மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பால், பழம் , ரொட்டி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, கால் பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் முதல்வர் பூர்த்தி செய்வார் என்று கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments