விமான ஜன்னல் வழியாக செல்போன் வாங்கும் பைலட்... வைரலாகும் வீடியோ

0 3853

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் மறந்து விட்டு சென்ற செல்போனை விமான பைலட் விமானத்தின் ஜன்னல் வழியாக வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Long Beach விமானநிலையத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து புறப்படும் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் அவசரத்தில் தனது செல்போனை மறந்து விட்டு விமானத்தில் ஏறியுள்ளார்.

இதனைக் கண்ட விமான நிலைய ஊழியர்கள் அந்த செல்போனை எடுத்து பைலட் மூலம் உரிமையாளரிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விமானம் புறப்பட தயாரான நிலையில் ஜன்னல் வழியாக அந்த செல்போன் பைலட்டிடம் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments