கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து வழிபாடு
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளதை அடுத்து தமிழ்நாடடின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் மாலைப் போட தொடங்கி உள்ளனர்.
சென்னையில் மகாலிங்க புரம் அய்யப்பன் கோவிலில் மாலை போட அதி காலையிலேய பக்தர்கள் குவிந்து விட்டனர்.
இதே போன்று தென்காசி, ராம நாதபுரம், கோவை , மதுரை. திருச்சி உட்பட பல இடங்களில் பக்தர்கள் காலையியில் மாலை போட்டு விரதத்தை தொடங்கினார்கள். குற்றால அருவியில் பக்தர்கள் நீராடி விட்டு மாலை அணிந்தனர்.
இன்று முதல் 41 நாட்கள் நீளும் மண்டல காலம், டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் மண்டல பூசையுடன் நிறைவு பெறுகிறது. இதற்காக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து சபரி மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது ஆரம்பமாகி உள்ளது.
Comments