கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த இடங்களில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் வல்லம்படுகையில் ஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, நிவாரண உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, மயிலாடுதுறையில் நல்லூர், வேட்டங்குடி, ஆலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட குடமுருட்டி ஆகிய இடங்களிலும் பாதிப்புகளை பார்வையிட்ட அவர், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். சீர்காழி சட்டநாதபுரத்தில் மழை பாதிப்பால் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
Comments