வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் துப்பாக்கிச்சூடு.. நூலிழையில் உயிர்தப்பிய ஹாலிவுட் நடிகை 'டென்னிஸ் ரிச்சர்ட்ஸ்'

0 2761

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஹாலிவுட் நடிகை டென்னிஸ் ரிச்சர்ட்ஸ் (Denise Richards) நூலிழையில் உயிர்தப்பினர்.

திரைப்பட ஸ்டூடியோ-வின் வாகன நிறுத்துமிடத்தில் தங்கள் பிக்கப் டிரக்கை நிறுத்த டென்னிஸ் ரிச்சர்ட்ஸும், அவரது கணவரும் இடம் தேடிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காரில் இருந்த நபர் கடுப்பாகி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில்,துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட்டுவிட்டு தப்பினார்.

பிக்கப் டிரக்கின் பின்புறத்தில் குண்டு துளைத்ததால் அதிர்ச்சி அடைந்த டென்னிஸ் ரிச்சர்ட்ஸ், அங்கிருந்து அழுதவாறே படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments