"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 18ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக வருகின்ற 20ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments