மாணவ, மாணவியருக்கு காலைச்சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர்..!
பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலைச்சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலிக்காட்சி வாயிலாக இன்று காலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2022-23ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், கட்டணமில்லா சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.
Comments