வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக வரும் 19ம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 19ம் தேதிக்கு பிறகு, படிப்படியாக மழை தீவிரமடையும் என்றும், இந்திய வானிலை மையம் முன்னறிவித்துள்ளது.
Comments