2030-க்குள் இந்தியாவின் மின் தேவையில் பாதியளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக உற்பத்தி செய்யப்படும் - பிரதமர் மோடி..!
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் உலகளாவிய வளர்ச்சிக்கு, இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தெரிவித்த பிரதமர் மோடி, எரிசக்தி விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மின் தேவையில் பாதியளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும், உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான பாதையை கண்டெடுக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலமே மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில், இந்தியா உறுதியாக உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
Comments