மாயாண்டி கொலை விவகாரத்தில், சட்டவிரோதமாக போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - காவல் ஆணையர்
சீவலப்பேரியில் மாயாண்டி கொலை விவகாரத்தில், சட்ட விரோத போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நெல்லை காவல் ஆணையாளர் அவினாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 13 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது சட்டவிரோத செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
முற்றுகையில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால், அவர்கள் அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும், ஆகவே, மாயாண்டி இறப்பு சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு யாரும் கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Comments