கல்லூரி விடுதியில் வழங்கிய புரோட்டா, சிக்கன் கிரேவி சாப்பிட்ட மாணவர்களுக்கு நள்ளிரவில் ஏற்பட்ட விபரீதம்..!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், விடுதியில் வழங்கிய உணவை சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயக்கமடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கீழக்கரை தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு, நேற்று இரவு உணவாக புரோட்டாவும், சிக்கன் கிரேவியும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நள்ளிரவில் மாணவர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் மாணவர்களை மருத்துவமனையில் அனுமதித்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments