காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை: 40 கிலோ தங்க நகைகள் வங்கி மண்டல மேலாளரிடம் ஒப்படைப்பு
சென்னையை அடுத்த மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெற்ற 39 கிலோ 704 கிராம் தங்க நகைகள் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மானேஜரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு , அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் கிடைக்க பெறும் வட்டி தொகை அந்தந்த கோவில்களின் மேம்பாட்டு பணிக்காக செலவிடப்பட உள்ளது.
Comments