தெலுங்குத் திரையுலகின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா காலமானார்

0 16661

 

தெலுங்கு திரைப்பட உலகத்தில் 1970 ம் ஆண்டுகளில் கொடி கட்டிப் பறந்த நடிகர் கிருஷ்ணா உடல் நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.

அவருக்கு வயது 80. நடிகர் கிருஷ்ணா 350 படங்களில் நடித்து உள்ளார்.அவற்றில் பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்ற படங்களாகும்.

நடிகர் கிருஷ்ணா 1980 வாக்கில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி.யாக இருந்தவர். பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இவருடைய மகன் ஆவார்.

கிருஷ்ணா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட திரை உலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments