கள்ளக்குறிச்சி வழக்கு-மாணவியின் செல்ஃபோனை ஒப்படைக்க உத்தரவு
கள்ளக்குறிச்சி பள்ளியில் மரணமடைந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கும்படி மாணவியின் பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவி ஸ்ரீமதி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கின் விசாரணையில், சிறப்பு புலன் விசாரணை குழு, சி.பி.சி.ஐ.டி.யின் அறிக்கைகளை அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டதாக 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் செல்போனை பெற்றோர் ஒப்படைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அப்போது, மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் அவசியம் என தெரிவித்த நீதிபதி, அதனை ஒப்படைக்க உத்தரவிட்டார்.
Comments