மீன் தொட்டியில் விழுந்த குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு.. விளையாட்டுப் பொருளை எடுத்தபோது விபரீதம்
சென்னை அம்பத்தூரில் வீட்டின் தரையில் வைக்கப்பட்ட மீன் தொட்டியில் விழுந்த ஒன்றரை வயது பெண் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது.
வெங்கடாபுரத்தில் வசிக்கும் யுவராஜ் - கௌசல்யா தம்பதியின் இரண்டரை வயது குழந்தை மீனாட்சி. குழந்தையிடம் விளையாட்டுப் பொருளை கொடுத்து விட்டு, இவரது தாயார் சமையல் செய்துள்ளார். மீன் தொட்டிக்குள் விழுந்த விளையாட்டுப் பொருளை குழந்தை எடுக்க முயன்றபோது தடுமாறி தண்ணீருக்குள் விழுந்து விட்டது.
குழந்தையை கவுசல்யா தேடியபோது, மீன் தொட்டிக்குள் கிடந்ததை பார்த்து அலறித் துடித்தார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments