ஆவடி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை

0 3342

சென்னை அடுத்த ஆவடியில் பாலிடெக்னிக் மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநின்றவூரை சேர்ந்த கோதண்டபாணி என்பவரின் 17 வயது மகன் மோனிஷ், திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் 3ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், ஆவடி ரயில் நிலையம் சென்ற அவர், திருப்பதியில் இருந்து சென்னை செல்லக்கூடிய சப்தகிரி ரயில் முன்பு பாய்ந்து  தற்கொலை செய்து கொண்டார்.

விதிமுறைகளை மீறி மோனீஷ் கொண்டு சென்ற செல்போனை கல்லூரி நிர்வாகம் பறிமுதல் செய்து வைத்துக் கொண்டு திருப்பி கொடுக்க மறுத்ததால் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments