மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

0 4902

சென்னை வியாசர்பாடியில் மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எஸ்.ஏ.காலனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மகாவிஷ்ணு, நேற்று கொளத்தூரில் இருக்கும் நண்பனின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று, நண்பர்களுடன் மது அருந்திய பிறகு, துரித உணவகம் ஒன்றில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

போதை தலைக்கேறி தடுமாறிய விஷ்ணுவிற்கு, நண்பர்கள் லெமன் டீ வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்தபிறகு வாந்தி எடுத்து மயங்கிய அவருக்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments