மழை-வெள்ள பாதிப்பால் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பால் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், மழையால் ஏற்பட்ட சேதங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை குறித்த விவரங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டார்.
Comments