பாட்டிலை உடைத்து கழுத்து, வயிற்றை வெட்டி கொண்டு மதுபோதையில் ரகளை செய்த இளைஞர்..!
சென்னை ஓட்டேரி பகுதியில் பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி பாட்டிலை உடைத்து கழுத்து, வயிற்றையும் வெட்டிக் கொண்டதோடு, காவல் உதவி ஆய்வாளரையும் குத்த பாய்ந்த போதை இளைஞரை போலீசார் மடக்கிபிடித்தனர்.
புளியந்தோப்பை சேர்ந்த அப்துல்லா என்பவர் குடிபோதையில் தகராறு செய்வதாக புகார் வந்ததையடுத்து அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைகால்களைக் கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறையில் இருந்த அப்துல்லாவை விட்டு அவருடைய மனைவி பிரிந்து சென்றதும், சிறையில் இருந்து வந்ததும் அவரை சேர்த்து வைக்கக்கோரி தகராறு செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Comments