உதய்ப்பூர் அருகே தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல்.. ரயிலைக் கவிழ்க்க நடந்த சதியா என NIA அதிகாரிகள் விசாரணை.!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல், விரைவு ரயிலைக் கவிழ்க்க நடந்த சதியா என்று தேசியப் புலனாய்வு முகாமை அதிகாரிகள் மற்றும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத் வழித்தடத்தில் உள்ள அந்த ரயில் பாதையை இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு விரைவு ரயில் ஒன்று செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. இதனால் சுமார் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Comments