நொய்டாவில் நாய், பூனைகளை பதிவு செய்யாமல் வளர்த்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் - இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு
நொய்டாவில் நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகளை பதிவு செய்யாவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் புறநகர் பகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வீடுகளில் வளர்க்கும் நாய், பூனையை வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு இல்லாமல் வளர்ப்போருக்கு 10 ஆயிரம் ரூபாயும், குறிப்பிட்ட காலத்தில் தடுப்பூசி, கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளவில்லையெனில், மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமென, இந்திய விலங்கு நல வாரியத்தின் நொய்டா பிராந்தியம் அறிவித்துள்ளது.
Comments