மாதம் 60 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள் தான் ஏழைகளா? - முதலமைச்சர் கேள்வி
முன்னேறிய வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
அக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
மாதம் 60 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள் தான் ஏழைகளா? என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், பொருளாதார ரீதியில் வழங்கும் இட ஒதுக்கீடு, இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.
Comments