ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க ஜோ பைடன் ஆர்வம்
இந்தோனேசியாவின் பாலியில் 14ம் தேதி தொடங்கும் இரண்டு நாள் ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். டிசம்பர் 1 முதல் ஜி 20 கூட்டமைப்புக்கு இந்தியா ஓராண்டுகாலம் தலைமை தாங்க உள்ளது.
எனவே இதில் அமெரிக்கா ஈடுபாடு கொள்வது உறுதி என்று கூறினார். மோடி ஏற்கனவே வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளதையும் இரு தலைவர்களும் மிகவும் யதார்த்தமான ஆக்கப்பூர்வமான உறவை வளர்த்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இரண்டு தலைவர்களும் இந்திய அமெரிக்க நட்புறவை வலுப்படுத்த அவரவர் தரப்பில் பொதுவான ஆர்வம் காட்டி வருவதாகவும் ஜேக் சலிவன் தெரிவித்துள்ளார்.
Comments