அமெரிக்காவின் நிதிக்கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்

0 20172

அமெரிக்காவின் நிதிக்கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்தாலி, மெக்சிகோ, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் நிதிக்கண்காணிப்பு பட்டியலில் இருந்து விலக்கு பெற்றுள்ளன. சீனா, ஜப்பான், ஜெர்மனி, கொரியா, மலேசியா, சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகள் தொடர்ந்து நிதிக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா தனது தொழில் வர்த்தகம் அதிக அளவில் நடைபெறும் நாடுகளின் பணப்பரிவர்த்தனைகள் , நிதிக் கொள்கை மற்றும் பொருளாதார நிலவரங்களைக் கண்காணிக்க நிதிக்கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments