காசோலை மோசடி வழக்கில், ஆப்பிள் மொத்த வியாபாரி கைது

0 5952

ஜம்மு-காஷ்மீரில் இருந்து கோடிக்கணக்கில் ஆப்பிள்களை இறக்குமதி செய்த கோயம்பேடு மொத்த வியாபாரி, காசோலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் பிருந்தாவன் நகரை சேர்ந்த தினகரன் என்பவர், காஷ்மீரைச் சேர்ந்த ஆப்பிள் பழ நிறுவனத்திடம் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆப்பிள்களை இறக்குமதி செய்துவிட்டு, பணத்தை திருப்பித் தரமால் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட கோயம்பேடு போலீசார், தலைமறைவாக இருந்த தினகரனை கைது செய்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments