கொரோனா பெருந்தொற்றுக்கு பின் 1.2 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டிய எமிரேட்ஸ்..!
கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மீண்டும் விமான சேவை தொடங்கிய நிலையில், எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் அரையாண்டில் 1.2 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.6 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எமிரேட்ஸ் குழு தெரிவித்திருந்தது.
இந்நிறுவனம் கொரோனா காலகட்டத்தில் வாங்கிய 4 பில்லியன் டாலர் கடனை தற்போது திருப்பி செலுத்த தொடங்கியுள்ள நிலையில், இந்த வருடத்திற்குள் முழு கடன் தொகையையும் திருப்பி செலுத்தி விடுவோம் என்று அதன் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Comments