வழக்கு பதிவு செய்யாமலிருக்க ரூ.5000 லஞ்சம்.. காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை..!

0 4265

திருச்சியில், வழக்கு பதியாமலிருக்க 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு, முனியன் என்பவர், சம்பள பாக்கி தொடர்பாக அவர் வேலைபார்த்து வந்த அரிசி ஆலை உரிமையாளர் செல்லையா மீது காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

ஆய்வாளர் முருகேசன், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க செல்லையாவிடம் 5,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த முருகேசனுக்கு, திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments