தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
தமிழகத்தில், அடுத்த இரண்டு நாட்களில் 6 மாவட்டங்களுக்கு, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுப்பெற்று, தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால், இன்று சென்னை உட்பட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 3 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், அம்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
நாளை சென்னை உட்பட 15 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 19 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், அம்மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
Comments