காற்றாலை நிறுவனத்திற்கு இரும்பு பிளேட் ஏற்றி வந்த ராட்சத லாரி, சாலை வளைவில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு..!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே காற்றாலை நிறுவனத்திற்கு இரும்பு பிளேட் ஏற்றி வந்த ராட்சத லாரி, சாலை வளைவில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுஸ்லான் காற்றாலைக்கு நாமக்கல்லில் இருந்து 40 டன் இரும்பு பிளேட் ஏற்றி வந்த 28 டயர் கொண்ட ராட்சத லாரி, ராதாபுரம் காமராஜ் மருத்துவமனை அருகே வந்த போது குறுகிய சாலை வளைவில் சிக்கிக் கொண்டது.
தகவலறிந்து வந்த போலீசார் கிரேன் உதவியுடன் ராட்சத லாரியை அப்புறப்படுத்தினர்.
இதனால் ராதாபுரம் கூடங்குளம் சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
Comments