நவ.14ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 3522

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 12ம் தேதிக்குள் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நெருங்கி வரக்கூடும் என்பதால், வருகின்ற 14ம் தேதி வரையில் தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாளையும் நாளை மறுநாளும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments