4முறை நீட் தேர்வு எழுதி விடாமுயற்சியால் மருத்துவக் கனவை நனவாக்கிய பழங்குடியின மாணவிக்கு குவிந்த பாராட்டுகள்..!
நீலகிரி மாவட்டத்தில் இருளர் பழங்குடியின சமுதாய மாணவி ஒருவர் விடாமுயற்சியின் காரணமாக தனது மருத்துவ கனவை நனவாக்கி உள்ளார்.
கோத்தகிரி சோலூர்மட்டம் அடுத்த தும்பிபெட்டு பகுதியில் இருளர் இனத்தைச் சேர்ந்த பாலன்- ராதா தம்பதியினருக்கு ஸ்ரீமதி என்ற மகள் உள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிளஸ் டூ முடித்த ஸ்ரீமதி 3 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.
இந்த நிலையில் 4 வது முறையாக இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஸ்ரீமதிக்கு கலந்தாய்வில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது.
தன்னுடைய விடா முயற்சியின் காரணமாக மருத்துவக் கனவை நனவாக்கி வெற்றி பெற்ற ஸ்ரீமதிக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Comments