சேலத்தில் பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்ற விவகாரத்தில் திடுக்கிடும் பல தகவல்கள்..!

0 3865

சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில் குழந்தையின் தாய் மற்றும் அவரது சகோதரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீலநாயக்கன்பட்டியில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், பிறந்து நான்கே நாட்களான பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற இடைத்தரகர்களான லதா, வளர்மதி மற்றும் அவரது கணவர் மதியழகன் ஆகியோரை கைது செய்து செய்தனர்.

தாய் அனுமதியுடன் தான் விற்பனை செய்ததாக கைதானவர்கள் கூறிய நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

வறுமையின் காரணமாகவே குழந்தையை விற்க முயற்சித்ததாகவும், இடைத்தரகர்கள் ஆசைவார்த்தை கூறி குழந்தையை வாங்கி சென்றதாகவும் தாய் வாக்குமூலம் அளித்ததுடன், குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments