கடன் செயலிகள் மூலமாக கோடிக்கணக்கில் பணம் திரட்டிய மோசடி தொடர்பாக சீனர் உள்பட 24 பேர் கைது!

0 3466

சுமார் 100 கடன் செயலிகள் மூலமாக கோடிக்கணக்கில் பணம் திரட்டிய மோசடியை டெல்லி போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் பின்னணியில் உள்ளவர்கள் சீனாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மொபைல்கள் மூலமாக உடனடிக் கடன் வழங்குவதாக மோசடிப் பேர்வழிகள் வலை விரிக்கிறார்கள்.

பணத்தேவை உள்ளவர்களுக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் என்று சிறிய தொகையை கடனாக வழங்கி அநியாய கந்து வட்டியை வசூலிக்கின்றனர்.பலர் லட்சக்கணக்கில் கடனைத் திருப்பி செலுத்த நேரிடுகிறது.

சிலரை ஆபாசப்படங்களைக் காட்டி இந்த கும்பல் மிரட்டி பணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்த நிலையில், இந்த மோசடி தொடர்பாக சீனர் ஒருவர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments