முன்னாள் டிஜிபி ஜாபர் சேட்டுக்கு சொந்தமான ரூ.14.23 கோடி சொத்துக்கள் முடக்கம்..!

0 3148

முன்னாள் டி.ஜி.பி. ஜாஃபர் சேட்டின் மனைவி உட்பட மூன்று பேருக்கு சொந்தமான ரூ.14 கோடி ரூபாய் மதிப்பு உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

2006 முதல் 2011 வரையிலான ஆட்சிக் காலத்தில் உளவுத்துறை ஐ.ஜி.யாக பணிபுரிந்த  ஜாஃபர்சேட்டின் மனைவி பர்வீன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கத்தின்  மகன் துர்காசங்கர் இருவரும் வீட்டு வசதி வாரியத்திடம் மனைகளை பெற்று லேண்ட் மார்க் என்ற நிறுவனத்திடம் விற்றனர் என்பது வழக்காகும்.

இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த அமலாக்கத் துறை ஜாஃபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாஃபர், ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கர், லேண்ட்மார்க் நிறுவனத்தின் உரிமையாளர் உதயகுமார் ஆகியோருக்கு சொந்தமான 14 கோடியே 23 லட்சம்  ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி உள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments