ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக தமது வாகனத்தை நிறுத்திய பிரதமர் மோடி

0 2507

5ஜி வசதியால் கடைக்கோடி கிராம பள்ளிகளிலும் நகரங்களுக்கு இணையான கல்வி கிடைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தின் சுஜன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர், 2014ஆம் ஆண்டு வரை நாட்டின் காவல் பணிகளில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் இருந்த நிலையில், 8 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்ததாக கூறினார்.

தற்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதாகவும், அந்த இரு மாநிலங்களும் வளர்ச்சி அடைந்ததாக எந்த செய்தியும் வரவில்லை என்றும் கூறினார். முன்னதாக, சம்பி என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக தமது வாகனத்தை பிரதமர் மோடி நிறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments