அடுத்த 5 ஆண்டுகளில், உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் - பொருளாதார வல்லுநர் சேத்தன் அஹ்யா கணிப்பு

0 7547

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என Morgan Stanley நிதி நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர் சேத்தன் அஹ்யா (Chetan Ahya) கணித்துள்ளார்.

GST வரி, சுலபமான ஆன்லைன் பரிவர்த்தனை, கார்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை, உள்நாட்டு உற்பதியை அதிகரிக்கும் மேக் இன் இந்தியா போன்ற பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், வெளி நாட்டு முதலீடுகளும், வேலை வாய்ப்புகளும் அதிகரித்து, 2027ம் ஆண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 3.4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த பத்தாண்டுகளில் இரட்டிப்பைவிட அதிகமாகி 8.5 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments