குழந்தை விற்பனை - வறுமையின் காரணமாக குழந்தையை விற்க முயற்சித்ததாக தாய் வாக்குமூலம்..!

0 3552

சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த வழக்கில், குழந்தையின் தாய் மற்றும் அவரது சகோதரியிடம், போலீசார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

சீலநாயக்கன்பட்டியில் குழந்தையை விற்பனை செய்ய முயன்றபோது கைதான இடைத்தரகர்கள் லதா, வளர்மதி, அவரது கணவன் மதியழகன் ஆகியோர், குழந்தையின் தாய் அனுமதியின் பேரிலேயே, விற்பனை செய்ய கொண்டு வந்ததாக கூறியிருந்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வறுமையின் காரணமாகவும், இடைத்தரர்கள் ஆசை வார்த்தை கூறியதாலும் குழந்தையை விற்க முன்வந்ததாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

மேலும் தாய் தனது குழந்தையை தானே திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments