வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 11ம் தேதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால், நாளை முதல் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய சூழலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தீவிரம் குறித்து அறிவிப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை.
Comments