மாடலிங் பெண்ணுக்கு மிரட்டல் - குறும்பட இயக்குனர் கைது
வெளிநாட்டு மாடலிங் ப்ராஜெக்டுக்கு ஆள் தேவைப்படுவதாக கூறி பெண்ணிடம் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பெற்று, மிரட்டி பணம் பறிக்க முயன்ற குறும்பட இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் அளித்த புகாரில், இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்திற்கு மாடலிங் தேவைப்படுவதாக செல்போன் வாட்ஸ்அப்பில் வந்த தகவலை நம்பி தனது புகைப்படங்களை அனுப்பியதாகவும், அதனை பெற்றுக் கொண்டு 3 லட்ச ரூபாய் கேட்டு மர்மநபர் மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, வாட்ஸ்அப் மொபைல் எண்ணின் ஐபி முகவரியை வைத்து திருப்பூரைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுடன் ஏற்கனவே ரஞ்சித் தொடர்பில் இருந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டதால், பழி வாங்குவதற்காக பேசி மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
Comments