லாபம் ஈட்டுவதற்கு கல்வி ஒன்றும் வியாபாரம் அல்ல - உச்சநீதிமன்றம்!
"லாபம் ஈட்டுவதற்கு கல்வி ஒன்றும் வியாபாரம் அல்ல" என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கட்டணத்தொகையை வருடத்திற்கு 24 லட்சம் ரூபாயாக மாநில அரசு உயர்த்தியது. அரசின் இந்த உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதனை எதிர்த்து ஆந்திர மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சுதான்ஷூ தூலியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 7 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயித்தது நியாயமற்றது எனக் கூறிய நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த தவறும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Comments