எக்சாம் எழுத அனுமதி கொடுங்க சார்... நல்ல வேலை கிடைக்க எக்சாம் எழுதணும் சார் தாளாளரிடம் கெஞ்சும் மாணவர்... மாணவனை தாக்கியதாக தாளாளர் மீது புகார்
சென்னையில் விமானபோக்குவரத்துத் துறை தொடர்புடைய அகாடமியில் படித்துவரும் மாணவனை, தாளாளர் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.
சென்னை யில் விமானப் போக்குவரத்து துறை தொடர்பான கல்வி கற்று தரக்கூடிய பைக்டர் விங்ஸ் ஏவியேசன் அகாடமி பெயரில் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு அரவிந்த் என்ற மாணவர் பிஎஸ்சி ஏவியேசன் படித்து வருகிறார். ஆண்டுக்கு 87 ஆயிரம் ரூபாய் என இரண்டு ஆண்டுத் தேர்வுகளை எழுதிய நிலையில், மூன்றாம் ஆண்டு கல்வி கட்டணத்தை செலுத்தாததால் அவரால் கல்வியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அகாடமிக்கு சென்ற அரவிந்த் இறுதியாண்டு தேர்வு எழுத தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கல்லூரி தாளாளர் அலெக்சாண்டரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு இறுதியாண்டு தேர்வுகள் முடிந்து 6 மாதங்கள் கடந்து விட்டதாகவும், அதனால் இறுதி ஆண்டு தேர்வு எழுத வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். தன்னைத் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கேட்ட அரவிந்தை அங்கிருந்த நபர் விரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், அகாடமி சார்பாக அரவிந்த்மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அத்துமீறி அலுவலகத்தில் நுழைந்து தாளாளரை அடித்து விட்டதாகவும் , தற்காப்புக்காக தடுத்தபோது திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments