குண்டர் சட்டத்தில் கைதான ராக்கெட் ராஜா விசாரணைக்காக ஆஜர்..!

0 3870

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜாவை விசாரணைக்காக பலத்த பாதுகாப்புடன் சென்னையில் உள்ள அறிவுரை கழகத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

நெல்லையில் கடந்த ஜூலை மாதம் மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பனங்காட்டுப்படை தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

சென்னை ஆட்சிய்ர லுவலகத்தில் அமைந்துள்ள அறிவுரை கழகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி முன்பு ராக்கெட் ராஜா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்துக்கு எதிராக வாதம் நடந்தது.

விசாரணைக்குப் பிறகு ராக்கெட் ராஜாவை போலீஸ் வேனில் ஏற்றி மீண்டும் கோவை அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments