சென்னையில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும்-மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
சென்னையில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்து உள்ளார்.
சென்னை ஆலந்தூரில செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரந்தூர் விமான நிலையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் துவங்கப்பட உள்ளது என்றார். எனவே நிலங்களை கையகப்படுத்துவது குறித்து மாநில அரசுதான் முடிவு செயயவேண்டும் என்றும் கி ஷன் ரெட்டி தெரிவித்தார்.
அவர் முன்னதாக வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
Comments