கடந்த ஆண்டை விட 10000 மாணவர்கள் அதிகமாக பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் - அமைச்சர் பொன்முடி

0 3163

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு மூன்று சுற்றுகள் முடிந்த நிலையில், கடந்த ஆண்டை விட, பத்தாயிரம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கிண்டியிலுள்ள தொழில் நுட்ப கல்வி இயக்குனரகத்தில், நான்காம் கட்ட கலந்தாய்வை, அமைச்சர் துவக்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 14ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில், இதுவரை 89 ஆயிரத்து ஐநூற்று 85 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

அரசு கலை கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள 4000 இடங்கள் தேர்வு மூலம் நிரப்பபட உள்ளதாகவும், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு இந்த நியமனத்தில் செல்லாது எனவும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments