இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது
இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது.
முழு சந்திரன் தோன்றும் நாளில், சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால், சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்திய நேரப்படி, பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது.
பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி, 5.12 மணி வரை முழுமையாக மறைக்கப்பட்ட நிலையிலும், மாலை 6.19 மணி அளவில் பகுதி அளவிலும் சந்திரகிரகணம் காணப்படும். சென்னையில், மாலை 5.39 மணியளவில் சந்திர கிரகணத்தைக் காண இயலும்.
Comments