பௌர்ணமியை முன்னிட்டு கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்ற 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள்..!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கொட்டும் மழையிலும் கிரிவலம் சென்று சுவாமியை தரிசித்தனர்.
ஐப்பசி மாத பௌர்ணமியான நேற்று இக்கோவிலில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ராஜகோபுர நுழைவாயில் மற்றும் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்கள் அனைவரும் கோயில் பின்புறம் உள்ள 2ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையை சுற்றி 14 கிலோமீட்டர் நடந்து சென்று கிரிவலப் பாதையில் உள்ள 9 லிங்கங்களையும் தரிசனம் செய்தனர்.
Comments