அரசுப் பள்ளி கட்டிட மேற்கூரை காங்கீரிட் பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம்

0 1974

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசுப் பள்ளியில் கட்டிடத்தின் சீலிங் காங்கீரிட் பெயர்ந்து விழுந்ததில் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் மண்டை உடைந்தது.

பாரதியார் நகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், திடீரென வகுப்பறையின் மேல்புற சீலிங் காங்கீரிட் 2 அடி அகலத்திற்கு பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் வகுப்பில் முன் வரிசையில் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் மண்டை உடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments